
குறித்த தனியார் கல்வி நிலையத்தின் இயக்குனரிற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டு ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சார்பில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் சாட்சிகள் மற்றும் பாதீக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகளினூடாக மன்னார் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலே குறித்த கல்வி நிறுவனத்தின் இயக்குனரின் பிணை மனு நீக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மன்னாரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு தொழிற்பயிற்சி கல்வியை மேற்கொள்ளச் சென்ற மாணவி ஒருவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதே கல்வி நிலையத்தின் இயக்குனர் பாலியல் முறைக்கேட்டில் ஈடுபட முயற்சித்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கல்வி நிலையத்தின் இயக்குனர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்ட போது வழக்கிற்கான முறைப்பாட்டினை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும், குறித்த சந்தேக நபரின் சார்பாக குறித்த மாணவியின் பெற்றோரிற்கு பல தரப்பினரிடம் இருந்து அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மன்னார் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள்,சந்தேக நபரின் உறவினர்கள் போன்றோர் தமது அதிகாரத்தை பயண்படுத்தி முறைப்பாட்டை மீளப்பபெற்றுக்கொள்ளுமாறு குறித்த மாணவியின் பெற்றோரிற்கு அழுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொள்வதில்லை என உறுதியுடன் செயற்பட்டனர்.
இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மாணவி சார்பாக கடந்த திங்கட்கிழமை மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சந்தேக நபருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு குறித்த மாணவியின் பெற்றோரிற்கு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டமை குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
-மேலும் குறித்த மாணவியின் தந்தையின் முறைப்பாட்டை சத்தியக்கடதாசி வடிவில் மன்றில் சமர்ப்பித்தனர்.
-இதன் போது மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் குறித்த வழக்கு விசாரனைகளின் சாட்சிகளை அச்சுரூத்தும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர் நீதிமன்ற செயற்பாடுகளை முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பிணையில் விடுவிப்பது சாட்சிகளுக்கும்,பாதீக்கப்பட் டவர்களுக்கும் அச்சுரூத்தலாக காணப்படும் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் உரிய விசாரனைகளை மேற்கொண்டு மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி மன்னார் பொலிஸ் அத்தியட்சகரக்கு மன்னார் நீதிமன்றம் கட்டளையிட்டது.
-மேலும் மன்றின் விசாரனைகளை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாகவும் விசாரனைகளை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்,நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த நபர்களை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் மன்னார் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்தும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கும் படியும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட பிணை நீக்கப்பட்டு குறித்த நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மன்னார் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள்,மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள்,சிறுவர் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மேற்பார்வையினை மேற்கொள்ள வேண்டும் என்றும்,வாரந்தம் வெள்ளிக்கிழமைகளில் மாலையிலும்,ஞாயிற்றுக்கிழமையிலு ம் தனியார் கல்வி நிலையங்களின் வகுப்புக்கள் நடாத்தக் கூடாது என மன்னார் நீதவான் எ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
பாதீக்கப்பட்ட குறித்த மாணவியின் பெற்றோர் சார்பாக சட்டத்தரணிகளான அன்ரன் புனித நாயகம்,த.வினோதன்,திருமதி மங்களேஸ்வரி சங்கர்,ரனித்தாஞானராஜா ஆகியோர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment