கொழும்பின் புறநகர் பகுதியான வெலிவேரிய ரத்துபஸ்வலவில் 2013ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு மே மாதம் தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படிக்கோரி, வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியிலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மஹிந்த ராஜபக்ஷ அப்போது ஆட்சியிலிருந்து நிலையில், போராட்டம் நடத்திய மக்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர்.
பாதுகாப்பு பிரிவினரின் இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் காட்சியும் சமூக வலைத்தளங்களிலில் வெளியாகியிருந்த நிலையில், இந்த சம்பவம் முந்தைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரிகள் கோரியிருந்தனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்க 4.68 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வரும் எட்டாம் திகதி இழப்பீடு வழங்குவதற்கான வைபவம் நடைபெறவிருக்கிறது.
thanks bbc
0 comments:
Post a Comment