ஒரு உறவு முறியும் போது, அதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாளடைவில் முதலில் இருந்த அளவிலான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதை நீங்கள் மெல்ல உணர்வீர்கள். இது அனைத்து உறவிற்கும் பொருந்தும். இணக்கத்துடன் இருக்கிற ஒவ்வொரு ஜோடிகளும் சந்திக்கும் ஒன்றாகும்.
ஒரு உறவு வளர்கையில், நாம் செய்து கொண்டிருந்த சில விஷயங்களை நாம் நிறுத்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்கள் செய்வதை நிறுத்திவிட்டால், உங்கள் உறவின் உயிர்ப்பை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஒரு உறவில் நீங்கள் நிறுத்தக் கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். கீழ்கூறிய சில டிப்ஸ் உங்கள் உறவை எப்படி உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என்பதையும் விளக்கும். அதனால் அவைகளைப் படித்து விட்டு, நீங்கள் உங்கள் உறவில் நிறுத்தக் கூடாத விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விடுமுறையில் வெளியே செல்வது
நீங்கள் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் கூட விடுமுறையில் வெளியே செல்வதை கண்டிப்பாக நிறுத்தக்கூடாது. விடுமுறையில் வெளியே செல்வது உங்கள் உறவை சந்தோஷமாகவும், உயிர்ப்புடனும் வைத்திருக்கும். ஒரு தம்பதியாக நீங்கள் நிறுத்தக்கூடாத முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
உங்கள் துணையை புகழ்வது
உங்கள் துணையின் தோற்றத்தைப் புகழ்வதைப் பற்றி மட்டும் நாங்கள் கூறவில்லை. ஒருவரின் சந்தோஷத்திற்காக மற்றவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட பெரியளவில் பாராட்டி பேசினால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அதனால் உங்கள் துணையை பாராட்டாமல்
இருக்காதீர்கள்.
உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருத்தல்
உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றாலும் கூட, இந்த மனப்பான்மை உங்களை எங்கேயும் கூட்டிச் செல்லாது என்பதை விரைவிலேயே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உடலைப் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதை பொறுத்த மட்டில், உங்கள் துணையையும் ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்.
செக்ஸ் வாழ்க்கை
உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும், குதூகலமாகவும் இருக்க வேண்டுமானால், நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்க முடியாத மற்றொரு விஷயம் இது. ஒரு உறவு நீடித்து நிற்பதற்கு உடல் ரீதியான ஈர்ப்பு மிகவும் அவசியமாகும். அன்யோன்யம் இல்லாத உறவு நீண்ட நாளைக்கு நீடித்து நிற்காமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தானே!
0 comments:
Post a Comment