வவுனியா மாவட்டத்தில், ஆட்கடத்தல், தடுத்துவைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான கலந்துரையாடல், இன்று புதன்கிழமை (06) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத் தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை இதனை தெரிவித்துள்ளார்.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மேலதிக தகவல்களை 773301724 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment