வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மீள்குடியேறி, குடி நீர் பிரச்சினையால் அவதியுறும் மன்னார் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அமைச்சர் ரிசாத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற இடங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு நீர் வசதி பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகாளுக்கு தெரியப்படுத்திய போதும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அமைச்சர் பதியுதீன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் குடி நீர் பிரச்சினைகளை போக்கும் வகையிலும் மீள்குடியேறியுள்ள வடக்கு மக்களின் அவசர குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலும் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்காலிகமாக அந்தப்பிரதேச மக்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி நீரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நிரந்தர தீர்வுத்திட்டத்திற்குத் தேவையான ரூபா 39000 மில்லியனை ஒதுக்கித் தருமாறும் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் நீர்வளங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment