செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இவர், நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது 10 இலட்சம் ரூபா மற்றும் நான்கு சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செலிங்கோ குழுமத்துக்குச் சொந்தமான கோல்டன் கீ நிறுவனத்துக்குரிய 700 கோடி ரூபா பணத்தை, தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சிசிலியா, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
மேலும் சிசிலியாவுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி
0 comments:
Post a Comment