அலவ்வ, வென்னோருவை பிரதேசத்தில் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று பொல்கஹவல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment