தலவாக்கலை, வட்டகொடையில் நகரில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று (01) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மேலும் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு தலவாக்கலை, வட்டகொடை நகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் 18 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதபதி லலித் வீரதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
அதேவேளை விடுவிக்கப்பட்ட 14 பேரில் இருவர் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த காலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது
0 comments:
Post a Comment