‘புதுக்கோடையிலிருந்து சரவணன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு’ என்ற பாடல் மூலம் தனுஷ் பாடகராக அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘யாக்கை’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
குழந்தை வேலப்பன் இயக்கும் இப்படத்தில் கிருஷ்ணாவுடன் சுவாதி இணைந்து நடித்துள்ளார். ப்ரைம் பிச்சர்ஸ் சார்பாக முத்து குமரன் தயாரித்து வருகிறார்.
“காதலி மீது கோபம் கொள்ளும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. ‘சொல்லி தொலையேம்மா” என்பதே இப்பாடலின் கரு.
இந்த பாடலை தனுஷ்தான் பாடவேண்டும் என யுவன் பிடிவாதம் செய்ததாக இயக்குனர் குழந்தை வேலப்பன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment