விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருநங்கைகள் பங்கேற்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 5-ம் தேதி விழா தொடங்கி, தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருநங்கைகள் தாலிக்கட்டும் வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. கூத்தாண்டவர் முன்பு ஏராளமான திருநங்கைகள் தாலிக்கட்டிக் கொண்டனர்.
பின்னர், ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று காலை அரவான் களபலி நிகழ்ச்சியும், கூத்தாண்டவர் தேரோட்டம் நடைபெற்ற உள்ளது.
இந்த விழாவில் உள்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேஷியா, கனடா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
0 comments:
Post a Comment