வருடப்பிறப்பு காலங்களில் பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக பேசப்பட்ட நிறுவனத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்ததன் பின்னர் குறுகிய காலத்தில் அதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம்.
சதொச நிறுவனத்தின் தலைவர் உட்பட அமைச்சின் செயலாளர்கள் சதோச நிறுவனத்தின் அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு இது சாத்தியமாகியுள்ளது.
அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் நிதியின்றி முழுமையாக இந் நிறுவனத்தின் இலாபத்திலேயே இங்கு பணியாற்றும் 4000க்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கும் அளவிற்கு இன்று முன்னேறியுள்ளது.
12 வருடங்களுக்கு பின்னர் சதோச மொத்த விற்பனை நிலையமொன்றினை வவுனியாவில் திறந்து வைத்துள்ளமை சிறந்த விடயமாகும். இதனூடாக இந்த மாகாணத்தில் வாழும் மக்கள் சிறிய கடை வியாபாரிகளுக்கு மலிந்த விலையில் மொத்தமாக பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
இந் நிலையில் இந்த தமிழ் – சிங்கள புதுவருட தினத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந் நிலையில் நான் வியாபாரிகளுக்கு வேண்டுகோளாக கேட்கின்றேன். தயவு செய்து உரிய விலைக்கு மேல் அதிகரிக்காதீர்கள்.
அத்துடன் பாவனைக்கு உகந்த பொருட்களை விற்பனை செய்யுங்கள். அவ்வாறு இடம்பெறாது விட்டால் அந்த வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்
0 comments:
Post a Comment