ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார்.
பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment