முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடிப்பகுதியில் இராணுவத்திற்கென காணிஅளப்பதற்காக வருகைதந்த நில அளவையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளக்கும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்
முல்லைத்தீவு மாவட்த்தின் விசுவமடு தொட்டியடியில் தனியாருக்கு செந்தமான 1971ம் ஆண்டு படித்தவாலிபர் திட்டத்தினுடாக வழங்கப்பட்ட ஆறு பேருக்கு செந்தமான பதினெட்டு ஏக்கர் காணி இரானுவத்திற்கு வளங்குவதற்கென அளப்பதற்காக நிலஅளவையாளர்கள் வருகைதந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளக்கும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்
இந்தகாணிகளில் பயன்தரு மரங்கள் தென்னைமரங்கள் உள்ளிட்ட பல பெருமதியான மரங்கள் இந்த காணிகளின் இருப்பதாகவும் தாம் இவற்றைப்பெறமுடியாது மிகவும் கஸ்ரப்படுவதாகவும் இந்த பலனைப்பெறவே இரானுவம் இந்த இடத்தை கைப்பற்ற முயற்ச்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
0 comments:
Post a Comment