இது தொடர்பாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஊடக அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக பிராந்திய ஊடகவியலாளர்கள் உட்பட அலுவலக ஊடகவியலாளர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில் நேர்முகப்பரீட்சைகளில் கலந்து கொண்டதன் பிரகாரம் சில ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிலையில் மக்கள் வங்கியொன்றின் மூலமாக மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொள்ள ஆவண செய்யுமாறு ஊடகவியலார்களுக்கு கடிதம் ஊடக அமைச்சினால் அனுப்பட்டிருந்த நிலையிலும் வங்கிகளின் செயற்பாட்டினால் பல ஊடகவியலார்கள் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் வடபகுதிக்கான விஜயம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஊடக அமைச்சர் வட பகுதியை சேர்ந்த மோட்டர் சைக்கிளுக்கு தெரிவு செய்யப்பட்ட 41 ஊடகவியலார்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையிலும் இரு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே மோட்டார் சைக்கிளுக்கான காசோலை வழங்கப்பட்டிருந்தது.
ஏனைய ஊடகவியலார்களுக்கு குறித்த வங்கியினால் மோட்டர் சைக்கிள் பெறுவதற்கு ஆவண செய்யப்படும் என்ற கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மோட்டார் சைக்கிளை பெற முடியாதுள்ளதுடன் அலைக்கழிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. எனவே, ஊடகவியலாளர்களை ஏமாற்றாது உடனடியாக மோட்டார் சைக்கிளை வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment