வவுனியாவில் இடி மின்னல் தாக்கம் காரணமாகஇருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளது
நேற்று முன் தினம் மாலை இடி மின்னல் காற்றுடன் கூடியதாக மழை பெய்து கொண்டிருந்த போதே அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ் வீடு சேதமடைந்துள்ளதுடன் அருகில் இருந்த வளாகத்தில் குப்பை எரித்துக் கொண்டிருந்த ஆ.சு.நவாஸ் (வயது 52) என்பவர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி படுகாயமடைந்ததுடன் அவருக்கு அருகில் இருந்த நிசாம்தீன் (வயது 60) என்பவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தினால் அருகருகே இருந்த இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன
0 comments:
Post a Comment