வவுனியா கோவில்க்குளம் ரொக்கட் விளையாட்டுக்கழகத்தினால் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் (13.04.2016) இன்று காலை வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த வீரஇவீராங்கனைகள் கலந்து கொண்டதுடன் ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த மஸ்தான் எம்பிக்கு கழகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
அத்துடன் மஸ்தான் எம்பியினால் கழகத்தின் கொடியசைக்கப்பட்டு மரதன் ஓட்டபோட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment