இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இது வரையில் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட வில்லை.
இவ்வாறானதொரு நிலையில் இந்திய மத்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
ராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைப்பது தொடர்பில் இந்திய மத்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்பங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.
டில்லியில் இன்று சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்தப் போதும் இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியிருந்தார்.
ராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் ஒப்பந்தங்களை கைச்சாத்திட உள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த திட்டத்திற்கான நிதியை வழங்க முன் வந்துள்ளதாகவும் இந்திய மத்திய அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுதினம் 14 ஆம் திகதி டில்லியில் நடைப்பெறவுள்ள இந்தியாவின் முதலாவது கடல்சார் உச்சி மாநாட்டில் ராமேஷ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் , இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் எவ்விதமான பேச்சு வார்த்தையும் இது வரையில் முன்னெடுக்கப்பட வில்லை அரசாங்கம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி இரு நாடுகளுக்கு இடையில் பாலம் குறித்து கூறும் விடயங்கள் எமக்கு தெரியாது என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
0 comments:
Post a Comment