அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் பல நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன.
இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது.
இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள் வரலாற்றுமிக்க கோயில் விகாரைஇ பாலங்கள் முஸ்லிம்பள்ளி வாசல் பிள்ளையார் கோவில் கிறிஸ்தவ தேவாலயம் உட்பட பல்வேறுப்பட்ட ஞாபக சின்னங்கள் தற்போது வெளியில் தோன்றுகின்றன.
இதனை பார்வையிடுவதற்கு நாளாந்தம் பெரும் திரளான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் புரவன்லோ கங்கேவத்தையில் 1917 இல் கட்டபட்ட ஸ்ரீ கதிரேசன் ஆலயம் தற்போது தனது முழுத் தோற்றத்துடன் வெளியில் காணப்படுகின்றது.
முற்றிலும் கருங்கற்களினால் ஆன இந்த ஆலயத்தில் பல்வேறுபட்ட கலை அம்சங்கள் காணப்படுகின்றன.
இந்த வழிபாட்டுத்தலங்களை வழிபடுவதற்கு நாளாந்தம் செல்லும் பக்கதர்கள் மற்றும் கலை அம்சங்களை பார்த்து ஒரு கணம் திகைத்துப் போகின்றனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment