நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணகுமார் அறிமுக கூட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டுபேசினார், பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இங்கே போட்டியிடுபவர்கள் வேட்பாளர்கள் அல்ல, தலைவர்கள் அல்ல, உங்கள் வீட்டு பிள்ளைகள். அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் சீமான்.
ஒவ்வொரு முறை தேர்தலின்போது கச்சத்தீவை மீட்போம் என தி.மு.க. தேர்தல்அறிக்கை வெளியிடுகிறது. கச்சத்தீவை மீட்க இதுவரை எந்தவித போராட்டமும் அந்த கட்சி நடத்தியதில்லை.
தற்போது தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என மக்களை ஏமாற்றிவருகிறது. ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கச்சத்தீவு கொடுத்தது, கொடுத்தது தான் என கூறியிருக்கிறது.
இதில் தி.மு.க.வின் நிலைபாடு என்ன என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் ஊழல், லஞ்சம் இல்லை. மது கொள்கை இல்லை. தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியது தி.மு.க. தான்.
கூடங்குளத்தில் அணுஉலை கொண்டு வந்ததற்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் தான் காரணம்.
மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது தி.மு.க. ஆட்சியில்தான் என்றார் சீமான்.
இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியினருக்கு ஆதரவளித்தனர்.
0 comments:
Post a Comment