கிளிநொச்சி இரணைமடு காட்டு பகுதியில் விடுதலைப்புலிகளின் 5 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது
கிளி நொச்சி இரணைமடு சந்தியில் இருந்து இரணைமடு குளத்திற்கு செல்கின்ற பாதையில் இருந்து 30 மீற்றர்க்கு அப்பால் உள்ள காட்டுப்பகுதியில் கைக்குண்டுகளை கண்டதாக விறகு வெட்ட சென்ற ஒருவரினால் இன்று 11 மணியளவில் இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ படைத்தளத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து
இராணுவ குண்டு செயலிக்கச்செய்யும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்த குண்டு செயலிக்கச்செய்யும் பிரிவினர் குறித்த காட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த 5 கைக்குண்டுகளை இன்று மீட்டுள்ளனர்
இக் கைக்குண்டுகள் விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களினால் செய்யப்பட்ட எல் டீ டி பிறஸ் ஹாண்ட் கிறினற் என தெரிவிக்க படுகிறது
மீட்கப்பட்ட கைக்குண்டுகளை எடுத்து சென்று செயலிழக்க செய்ய உள்ளதாக கிளி நொச்சி இராணுவ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment