புகழ், பணம், அந்தஸ்து, நட்சத்திரம் என என்ன கூறிக் கொண்டாலும், அவர்களுக்கும் உணர்வுகள், சொந்த குணாதிசயங்கள் இன்பம், துன்பம் என அனைத்தும் இருக்க தான் செய்யும். அந்த வகையில் காதலித்து ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் பிரிந்த நடிகர், நடிகையர் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
1960-களில் தொடங்கி நேற்று வரை இந்த பட்டியல் நீடிக்கிறது. பல ஜாம்பவான்களின் பெயரும் கூட இந்த பட்டியலில் அடிப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா மொழி பிரபலங்களும் இந்த சூழலை சந்தித்துள்ளனர். சிலர் நிச்சயம் வரை சென்றும் கூட மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
த்ரிஷா – ராணா
சென்னைக்கு வந்தால் எனக்கு த்ரிஷா வீட்டிற்கு மட்டும் தான் வழி தெரியும் என மேடையிலேயே கூறினார் ராணா. இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படாததால் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.
பிரபு – குஷ்பு
அட இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்குமே என ரசிகர்களே விரும்பியவர்கள் இவர்கள். ஆனால், பிரபு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆயினும் இவர்கள் மத்தியில் காதல் இருந்தது என பல கிசு கிசுக்கள் 90-களில் பரவின.
சிம்பு – நயன்
உதட்டோடு, உதடு பதித்து வெளியான படத்தில் உச்சத்திற்கு சென்று அமர்ந்தது இவர்களது காதல் காவியம். ஓகே கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என பார்த்தல். சட்டென்று பிரிந்துவிட்டார்கள்.
ஹன்சிகா – சிம்பு
இது சிம்புவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஆனால், இதுவும் தோல்வியில் தான் முடிந்தது. பார்டி ஒன்றில் இறுக்கமாக கட்டியனைத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. வாலு துவங்கும் போது காதலில் இருந்தனர். வாலு இழுத்து இழுப்பில் உறவு முறிந்துவிட்டது.
நயன்தாரா – பிரபுதேவா
சிம்புவை பிரிந்த சோகத்தில் இருந்த நயனும், மகனின் இறப்பின் காரணமாக சோகத்தில் இருந்த பிரபு தேவாவும். வில்லு பட படப்பிடிப்புன் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி நெருக்கமாகினர். மும்பையில் இவர்கள் ஒன்றாக இருந்தனர் என்றும் செய்திகள் பல வந்தன. ஆனால், இந்த உறவும் பாதியிலேயே முறிந்து மீண்டும் சினிமாக்குள் முழுவீச்சில் இறங்கிவிட்டார் நயன்.
அக்ஷய் குமார் – ஷில்பா ஷெட்டி
இவர்கள் இருவரும் இனைந்து நிறைய படங்கள் நடித்துள்ளனர். இதனாலேயே இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது என கூறப்பட்டது. ஆனால், ட்வின்கில் கன்னா உடனும், தன்னுடனும் என இருவரிடமும் அக்ஷய் நெருக்கம் காண்பிப்பது தெரிந்து ஷில்பா குட்பை சொல்லிவிட்டார் என பாலிவுட்டில் அன்று செய்திகள் கசிந்தன.
சல்மான் கான் – ஐஸ்வர்யாராய்
பலரும் அறிந்த பிரபலமான காதல் இது. சஞ்சய் லீலா படத்தின் படப்பிடிப்பின் போது தான் இவர்கள் இருவர் மத்தியில் காதல் பூத்ததாம். 1999-2001 வரை மட்டுமே இவர்களது காதல் உறவு நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment