தனது மகளின் கொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத் தாருங்கள் என வித்தியாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதே வித்தியாவின் தாயார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார்.
இதன்போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி வவுனியாவில் வீடொன்றைப் பெற்றுத் தருமாறு வித்தியாவின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வித்தியாவின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே வித்தியாவின் தாயார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலளார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment