முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணலாறு பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்உதாவ என்ற பெயரில் புதிய வீட்டுத் திட்டங்களை அமைத்து வரும் சிறிலங்கா அரசாங்கம், முதலாவதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்தில் 24 வீடுகளை அமைத்திருக்கிறது. வீதிகள், குடிநீர், மின்சார வசதிகளுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பத்நுவர இசுறுபுர மாதிரிக் கிராமம் என்ற பெயரில் இந்த சிங்களக் குடியிருப்புத் தொகுதி அழைக்கப்படுகிறது.
சம்பத்நுவர இசுறுபுர வீடுமைப்புத் திட்டத்தை, சிறிலங்காவின் சிறிலங்காவின் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசம் ஏற்கனவே, ஐதேக ஆட்சிக்காலத்தில் பாரிய சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டது.
இந்தப் பகுதியில், புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவது மற்றும், ஏற்கனவே குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைத்துக் கொடுப்பதில், தற்போதைய அரசாங்கம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment