
சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமான் லெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
பெண் ஒருவரை காதல் செய்துவரும் இருவருக்கும் இடையில் கையடக்க தொலைபேசியில் வாயத்தர்கம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர் குத்தியவரின் தாயை இழுத்து பேசியதையடுத்து குத்தியவர் கோபம் கொண்டு சம்பவதினமான நேற்று இரவு 9.00 மணியளவில் நண்பர்கள் இருவருடன் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று அவருடன் ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்து நெஞ்சுப்பகுதியல் ஸ்கூட்டுறைவரால குத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்தர் இதனையடுத்து அங்கிருந்து மூவரும் தப்பிஓடியுள்ள நிலையில் படுகாயமடைந்த வரை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் சந்தேகத்தில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசர் மேற் கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment