இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–
சைவத்துக்கு மாறினேன்
‘‘நான் எளிதில் காதல்வசப்படுகிற பெண். ஆனாலும் இதுவரை எனக்கு பிடித்தமானவரை சந்திக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் வரும்போது காதலிப்பேன். அவருடன் ஜாலியாக சுற்றுவேன். விமானத்தில் ஒன்றாக பயணிப்பேன். ஓட்டல், உல்லாசப்பயணங்கள் என்றெல்லாம் இருப்பேன்.
எனக்கு சமையல் கொஞ்சம் தெரியும். நான் ஒரு சாப்பாட்டு பிரியை. ஐஸ்கிரீம், கேக் விரும்பி சாப்பிடுவேன். கேக் செய்யவும் தெரியும். ஒரு காலத்தில் அசைவ உணவுகளை ஒரு கட்டு கட்டுவேன். அதன்பிறகு மாமிசம், பால் இரண்டையும் தொடுவது இல்லை. சைவத்துக்கு மாறிவிட்டேன். எனக்கு முட்டை ரொம்ப பிடிக்கும். வீட்டில் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதை பார்த்து எனக்கும் ஆசை வந்தது. முட்டை மட்டும் சாப்பிடுகிறேன்.
இயற்கை
எனக்கு பிடித்த உணவு பட்டியலில் ஆப்பம் தேங்காய் பால் முதல் இடத்தில் இருக்கிறது.
தமிழ் நாட்டுக்கு போகும்போது இட்லி, சாம்பார், சட்னியை விரும்பி சாப்பிடுவேன். பயணங்கள் மிகவும் பிடித்தமானவை. விமானத்தில் அடிக்கடி சென்று சலித்து விட்டது. சாலையில் நெடுந்தூரம் செல்ல விரும்புகிறேன். ஐரோப்பிய நாடுகளில் சாலை பயணம் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். கடற்கரை, மலைபிரதேசங்கள் ஆகிய இரண்டு இடங்களிலும் பயணம் செல்ல பிடிக்கும்.
நான் இயற்கையை நேசிப்பவள். அழகான எல்லா இடங்களையும் எனக்கு பிடிக்கும். ஷாப்பிங் போனால் சிலர் மணிக்கணக்கில் செலவிடுவார்கள். நான் அப்படி இல்லை. பிடித்தமான பொருளை உடனே வாங்கிவிட்டு திரும்பி விடுவேன்.’’
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
0 comments:
Post a Comment