பல நிறுவனங்களும் வியந்து பார்க்கும் அளவிற்கு அப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படுகின்றது.
சீன அரசு அப்பிள் நிறுவனத்திடமிருந்து மூலக் குறியீட்டினை (Source Code) தருமாறு கேட்டிருந்தாக அண்மையில் செய்திகள் பரவின.
எனினும் நீண்ட மௌனத்திற்கு பின்பு மூலக் குறியீட்டினை தர முடியாது என்று அப்பிள் நிறுவனம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் சீன அரசு அப்பிள் நிறுவனத்தினடமிருந்து மூலக் குறியீட்டினை கேட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக தனிநபர் தகவல் பரிமாற்றத்தில் பாரிய குறைபாடுகள் இருந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதற்கு சங்கேத குறியீட்டு மாற்றம் மற்றும் தரவு தனியுரிமை (Encryption மற்றும் Data Privacy) என்பற்றில் காணப்பட்ட குறைபாடுகளே காரணமாக இனங்காணப்பட்டன.
இதன் பின்னர் பேஸ்புக், கூகுள் உட்பட பல நிறுவனங்கள் தமது பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் பாரிய முனைப்பு காட்டி வந்தன.
இதன் பின்னணியிலேயே அப்பிள் நிறுவனத்தின் மூலக் குறியீட்டினை சீன அரசு கோரியுள்ளது.
எது எவ்வாறெனினும் அப்பிள் நிறுவனத் தயாரிப்புக்களுக்கான மிகப்பெரிய சந்தையாக காணப்படும் சீனாவிற்கு தெரிவித்துள்ள இந்த மறுப்பானது அப்பிள் நிறுவனத்தை ஆட்டம் காண வைக்குமா என்ற சந்தேகம் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment