இம்முறை சிறுபோக செய்கைக்கு போதுமான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற மாட்டாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏப்ரல் மாதந்தோறும் பெய்யும் மழை வீழ்ச்சி, இம்முறை எதிர்பார்க்கும் அளவுக்கு பதிவாகாது என வானிலை நிபுணர் பேராசிரியர் ரஞ்சித் புண்ணியவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் பயிர்செய்கைக்கு தேவையான அளவு நீர் , நீர்த்தேக்கங்களில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் விவசாயிகள் விரைவில் சிறுபோக செய்கைக்கான நிலங்களை தயார்படுத்துமாறும் பேராசிரியர் ரஞ்சித் புண்ணியவர்தன வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறு போக செய்கைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment