சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடாத்துவதற்கு முடியாமல் போனமைக்கான காரணத்தை உடன் விசாரணை நடாத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிட்டிய கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அநில் ஜயசிங்கவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடுவே தம்மாலோக தேரரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு ஏற்ப குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை விசாரணை செய்தபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, மாதுலுவாவே சோபித்த தேரருக்கு சிகிச்சை அளித்த தேசிய வைத்தியசாலை, சென்ட்ரல் வைத்தியசாலை, நெவில் பிரணாந்து வைத்தியசாலை மற்றும் சிங்கப்புர் மவுன்ட் எளிசபெத் வைத்தியசாலை என்பவற்றினால் வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையை கருத்தில் கொள்ளுமாறும் இந்த உத்தரவில் வேண்டப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment