முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பு உதவி..!!

001சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு  அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக  வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து  ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது  நீங்கள் அறிந்ததே.

 

இதன் தொடர்ச்சியாக வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 08/04/2016, அதாவது வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு  மாஞ்சோலை  “வைத்தியசாலைக்கு தேவையான சத்திர சிகிச்சை  பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டது.



முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்  தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட  உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டு சத்திர சிகிச்சை பொருட்களை முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளர்  அவர்களிடம் கையளித்தார்.



இவ் நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு எஸ்.மணிவண்ணன், வன்னி மேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் திரு எஸ்.கஜூரன்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய சுவிஸ் நிர்வாகசபை உறுப்பினர்களுள் ஒருவரும், சமூக ஆர்வலருமான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316, 3073GUMLIGEN) விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமையலறை உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், கடந்தமாதம் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” சுவிஸ் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும்,



இந்த வகையில், இப்பொருட்களை மனமுவந்து தந்த சிலோவா வைத்தியசாலை (Stifftung Klinik SILOAH, Worb Str-316, 3073GUMLIGEN) நிர்வாகத்துக்கும், மேற்படி பொருட்களைப் பெற்றுத் தந்த திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களுக்கும், அவற்றை ஏற்றி, இறக்க உதவி செய்த திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன், திரு.சதீஸ் (பாடேன்), திரு.சஞ்சய் ஆகியோருக்கும், பொருட்களை ஏற்றி, இறக்கியதுடன், அவற்றைப் பொதி செய்யவும் முழுமையாக உதவிய திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன் ஆகியோருக்கு மனப்பூர்வமான எமது நன்றிகளை புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம் சார்பில் தெரிவிவிக்கப்பட்டது என்பதும்,



இதேவேளை இவற்றை, புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ன் ஷோன்புள் எனும் இடத்தில் வசிப்பவர்களுமான செல்வன் கிருஷாந் அவர்களின் 18வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான திரு.திருமதி கிருபா,வனி தம்பதிகளும்,


புங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களுமான அமரர் “செல்வி பரஞ்சோதி செல்வநிதி”யின் நினைவை ஒட்டி அவரது சகோதரியான திரு.திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரும்,



புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் வேலுப்பிள்ளை (முன்னாள் சர்வோதய ஊழியர்), இராசம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் ஒபெர்புர்க் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. குமார் தர்சினி குடும்பத்தினரும்,



புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு.சுப்ரமணியம் அவர்களின் நினைவாக, சுவிஸ் பேர்ன் ரூபெனக்த் பகுதியில் வசிப்பவர்களான திரு.திருமதி கைலாசநாதன் (குழந்தை) வாசுகி கும்பத்தினரும்,



புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சின்னத்தம்பி, செல்லம்மா ஆகியோரின் நினைவாக, புங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் பாடெனில் வசிப்பவர்களுமான திரு.திருமதி ஜெயக்குமார் (அப்பன்), சிவரஞ்சனி (தீபா) குடும்பத்தினரும் இணைந்து, வன்னிக்கு அனுப்பி வைக்கும் செலவை முழுமையாகப் பொறுப்பேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com