தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பாடல்களை செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று(வியாழக்கிழமை) சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment