நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன.
இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன்.
ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும்.
ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் பெறவில்லை.
சமீபத்தில் அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
நம் நடிகர்கள் பலரும் ஜோக்கர்களாகவே தெரிந்தனர்’ என அதிரடியாக அறிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் வேளையில் துணைத் தலைவர் பதவியில் சிம்பு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. சிம்பு மட்டுமின்றி விஜய், அஜித் இருவரும் கூட நட்சத்திர கிரிக்கெட்டைத் தவிர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அவர்கள் தரப்பிலிருந்து இன்னும் பதில்கள் வராத நிலையில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment