இலங்கையின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி செய்வதாக அவுஸ்திரேலிய தூதரகத்தின் வர்த்தக ஆலோசகரான DR.ஒஸ்கார் என்டெஸ்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் அவுஸ்திரேலியா உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
DR.ஒஸ்கார் என்டெஸ்னர் கடந்த வாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சுகாதார அமைச்சில் சந்தித்த போதே இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த கால ஆட்சியின் போது சுகாதாரத்துறைக்கு அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் அமைச்சர் ராஜித பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment