புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபரான முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு 01/04 ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வித்தியா கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டுள்ள 11 ஆவது சந்தேக நபருடைய வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் உடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சபேசன் விசாரணை செய்திருந்தார்.
இதன் போது குறித்த வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியினைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.
இருப்பினும் அவரை கைது செய்யத குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் தோன்றியிருக்கவில்லை. வழக்கினை ஊர்காவற்றுறை பொலிஸாரே கொண்டு நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாக்கிழமை வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
0 comments:
Post a Comment