உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள், இவை மூன்றும் நிறைய மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். நமது முன்னோர்கள் முந்தைய காலத்தில் உணவில் காரம் சேர்க்க மிளகை தான் பயன்படுத்தி வந்தனர். மிளகை போல காரம் தருவதனால் தான் மிளகாய்க்கு மிளகாய் என்ற பெயரே வந்தது என்பது தனிக்கதை.
சளி, காய்ச்சல், உடல் எடை, மூக்கில் இரத்தம் வழிதல், பித்தக்கற்கள் பிரச்சனை, தொண்டை கரகரப்பு என ஏராளமான பிரச்சனைகளுக்கு உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சிறந்த தீர்வளிக்கின்றன. அதே போல தான் கலப்படமற்ற தூய தேனும். உங்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ இல்லையோ. இந்த நான்கும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
தொண்டை கரகரப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், அரை டீஸ்பூன் கருப்பு மிளகுத்தூள் மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து இதமான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.
மூக்கடைப்பு
சம அளவு மிளகுத்தூள், இலவங்க பட்டை தூள் மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து அந்த பவுடரை நுகர்ந்து வந்தாலே மூக்கடைப்பு சரியாகிவிடும்.
பித்தக்கற்கள்
பித்தக்கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆலிவ் எண்ணெய், ஒருபங்கு எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத்தூள் கலந்து உட்கொள்வது பித்தக்கற்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என கூறப்படுகிறது.
வாய்ப்புண்
இதழ்களின் உட்புறத்தில் சிலருக்கு சூட்டுக் கொப்பளம் போல புண் வரும். இதை சரி செய்ய, உணவருந்திய பிறகு ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து மென்மையாக கொப்பளிக்க வேண்டும். இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள், நச்சுக்களை அழித்து, விரைவாக வாய்புண் ஆற வழிவகுக்கிறது.
உடல் எடை
கால் டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தூய தேன் இந்த மூன்றையும் நீரில் கலந்து பருகி வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.
குமட்டல்
ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், மிளகுத்தூள் கலந்து மெதுவாக சிப் செய்து பருகினால் குமட்டலை தடுக்க முடியும்.
பல் வலி
அரை ஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் க்ளோவ் ஆயில் சேர்த்து இதமாக, கவனமாக ஒரு நாளுக்கு இரண்டு முறை பற்களில் தேய்த்து வந்தால் பல் வலி குறையும். மேலும், பல் வலி இருப்பவர்கள் சர்க்கரை மற்றும் அசிடிக் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சளி, காய்ச்சல்
இதமான நீரில் அரைவாசி எலுமிச்சை பழத்தின் சாறு கலந்து குடித்து வந்தால் சளிக்கு நல்ல தீர்வுக் காண முடியும். மேலும், இதில் தேன் கலந்து பருகி வந்தாலும் நல்ல முன்னேற்றம் காண முடியும் என கூறப்படுகிறது.
மூக்கில் இரத்தம் வழிதல்
மூக்கில் இரத்தம் வழியும் போது, பஞ்சை எலுமிச்சை சாற்றில் சற்று நனைத்து அதை மூக்கில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தலையை மேல்நோக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இது உடனடியாக மூக்கில் வழியும் இரத்தத்தை நிற்க வைக்கும்.
0 comments:
Post a Comment