முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரானுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் இரவுவேளை இடம்பெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டு வீடுதிரும்பும் போதே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றையதினம் இரானுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் இரவுவேளை இடம்பெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய முள்ளியவளைப்பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் மதுபோதையில் வருகைதந்து கள்ளுக்குடிப்பதற்காக கள்ளை பெற்றுக்கொள்ள பனைமரத்திலேறி மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முள்ளியவளைப் பொலிசார் தெரிவித்தனர்
இந்தவிபத்து சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது இருப்பினும் இது தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்களும் எழுந்துள்ளன எது எவ்வாறிருப்பினும் மதுபோதைக்கு பல்வேறு இளைஞர்களும் அடிமையாகி பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு உயிரிழப்புக்களும் எற்ப்பட்டுவருகின்றன
இந்த சம்பவத்தில் 03ம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த சுரேஸ்குமார் வராகன் வயது(20) என்பவரே உயிரிழந்துள்ளார் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான மேலதிக விசாரனைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
0 comments:
Post a Comment