தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முழுமையான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை நல்லுாரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கைதிகளின் சுகாதார வசதிகள் தொடர்பாக எதிர்கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் எனவும், இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் ஐனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு சிறைச்சாலை திறப்பு தன்னிடம் இல்லை எனத் தெரிவித்த அவர், கைதிகளின் விடயம் தமிழ் மக்களின் உடனடி தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment