பெண்கள் என்றாலே புரியாத புதிர் என உவமையாக பல சமயங்களில் கூறப்படுவதுண்டு. இது உண்மையும் கூட. பல சூழல்களில் அப்பா, கணவன், அண்ணன், காதலன், சகோதரன் என எந்த ஒரு ஆண் உறவாலும் பெண்களின் சில குணாதிசயங்கள், செயல்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியாது.
இப்படி எல்லாம் கூறுவதால் ஏதோ சைக்கோத்தனமான செயல்பாடுகள் என எண்ணிவிட வேண்டாம், இப்படி புதிராக பெண்கள் திகழும் பலவன சிறுப்பிள்ளை தனமாக தான் இருக்கும். “ஏண்டா இவ இப்படி பண்றா…” என பல காதலனும், கணவனும், நண்பர்கள் மத்தியில் புலம்புவதும் உண்டு.
உண்மையில், குழந்தைகள் அடம்பிடிக்கின்றன என அடிக்கவா முடியும் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்…
காதலுக்கும் முதலீடு
தொழிலுக்கு பணத்தை முதலீடு செய்வது போல, உண்மையாக காதலித்தால் 24 மணி நேரமும் தாங்கிக் கொண்டே இருக்கும்படியான குணம், சென்டிமென்ட்டாக பேசுவது போன்றவற்றை முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பது. அக்கறையை வெளிப்படையாக காட்டாமல் இருந்தால் ஆண்கள் காதலிக்கவே இல்லை என எண்ணுவது.
அலங்கார அணிவகுப்பு
எதற்கு தான் இத்தனை அலங்கார பொருட்கள். உடை நிறத்திற்கு ஏற்ற உதட்டு சாயம், காலணிகள், வளையல் அந்த பவுடர், இந்த க்ரீம் என ஐந்து ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் வரை வகைவகையாக அலங்கார பொருட்களுக்கு ஏன் இவர்கள் செலவு செய்கிறார்கள்.
அலங்கார அணிவகுப்பு
பெரும்பாலும் பெண்கள் ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதை விட, பெண்கள் பொறாமை பட வேண்டும் என்பதற்காக தான் நிறைய அலங்காரம் செய்கிறார்கள்.
ஆடைக்கு குமுறல்
சென்ற மாதம் தான் நாலைந்து ஆடைகள் புதியதாக வாங்கியிருப்பார்கள். ஆனாலும், மாதம் பிறந்த முதல் நாள் முதலே, “புதுசா ஒரு ட்ரெஸ் கூட இல்ல..” என புலம்புவார்கள். (ஆண்களுக்கு ஒரு ஜீன்ஸ் புதுசு வாங்குனாலே வருஷம் முழுக்கு அது தான் புதுசு கண்ணா புதுசு…)
கவலையில்லை
“என்னைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்” என எப்போது ஒரு பெண் கூறுகிறாரோ, அப்போது நீங்கள் அவர் மீது கவலைப்பட வேண்டும், நீங்கள் அவர் மீது சரியாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என அவர் எண்ணுகிறார் என பொருள். பெண்கள் எதையும் நேரடியாக கூறவே மாட்டார்கள்.
வெளிப்படையாக கூறாதிருப்பது
ஏதேனும் பிரச்சனை என்றால் நேரடியாக கூற மாட்டார்கள். முதலில் சுற்றி வளைத்து பேசுவார்கள். ஆண்கள் பிரச்சனை என கண்டறிந்துவிட்டாலும், அது என்ன பிரச்சனை, என்ன நேர்ந்தது என பெண்கள் கூறுவதற்கும் ஆண்கள் கெஞ்சிவிட வேண்டும். புலம்புதலை வரம் பெற்று வந்திருப்பார்களோ???
கதை கதையாக பேசுவது
பிரச்சனை என்றால் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமாக இருப்பினும், நேர்க்கோட்டில் கூறுவதை விடுத்து, தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் தான் பேசுவார்கள். “ஏன் லேட்டு” என்று கேட்டால், “நான் கிளம்பும் போது அம்மா ஏன்னு கேட்டாங்களா, அப்பறம்…. ” என்று ஆரம்பித்து முடிப்பதற்குள் பொழுது சாய்ந்துவிடும்.
தோற்றம்
ஒரு சுற்று உடல் கூடிவிட்டால் கூட, “அய்யோ நான் குண்டாயிட்டேனா… ரொம்ப அசிங்கமா தெரியிதா, இனிமேல் டயட் கரெக்டா இருக்கணும்..” என தோற்றத்தை பற்றி அதிக சிந்தனையை செலுத்துவது.
அழகை ரசிக்காதிருப்பது
பெண்கள் சுடிதாரில் இருந்து ஒருநாள் மாறாக புடவையில் வந்தால் கூட ஆண்கள் கவிதையாக கொட்டி தீர்ப்பார்கள். ஆனால், அதையே ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஒரு செல்ஃபீயில் கூட அவர்கள் அழகாக தெரியும் படத்தை தான் நீங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட வேண்டும்.
0 comments:
Post a Comment