1990-களில் ஓடிய பெரும்பாலான படங்களை இன்று வெளியிட்டால் கண்டிப்பாக ஃபிளாப் ஆகிவிடும். இதை உங்களில் யாராலும் மறுக்க முடியாதல்லவா? அப்போது இதையும் நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆம், இனியும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு பெண்களை இம்ப்ரஸ் செய்ய முனைய வேண்டாம்.
ஏனெனில் காலம் மட்டுமல்ல, பெண்களும் வளர்ச்சியில் பல மலைகள் ஏறிவிட்டனர். தங்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்களே பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். ஆதலால், இப்போதெல்லாம் சினிமா ரசிகர்களை போல ரியாலிட்டியாக இருந்தாலே போதும், மாயஜாலம், வெட்டி சீன் எல்லாம் தேவையில்லை என்கிறார்கள்.
காசு, பணம், துட்டு, மணி
ஆண்களுக்கு இணையாக என்று இனியும் பொய் கூற முடியாது. ஏனெனில், ஆங்காங்கே பல இடங்களில் ஆண்களை காட்டிலும் அதிகமாக பெண்களே சம்பாதிக்கின்றனர். இதனால் இனிமேலும், பணத்தை மட்டும் வைத்து பெண்களை மயக்கிவிடலாம், கவிழ்த்துவிடமால் என எண்ண வேண்டாம்.
உடலமைப்பு
கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொண்டால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால், பெண்கள் சினிமா ஹீரோக்களிடம் மட்டும் தான் அதை எல்லாம் எதிர்பார்க்கிறார்களே தவிர கணவனிடம் அல்ல. படத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ரியாலிட்டியை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
பரிசு
பரிசு என்பது இப்போதெல்லாம் ஓர் பெரிய விஷயமே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலும் எம்.என்.சி.-ல் பணிபுரியும் பெண்களுக்கு சீக்ரெட் சாண்டா, பிறந்தநாள், தேங்க்ஸ் கிவ்விங் டே, லொட்டு லொசுக்கு என தொட்டதற்கு எல்லாம் பரிசு கொடுக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதனால், பரிசுகளை வைத்து பெண்களை இம்ப்ரஸ் செய்வதெல்லாம் இனி கொஞ்சம் கஷ்டம் தான்.
ரௌடி
நானும் ரௌடி தான் எல்லாம் படங்களில் மட்டும் தான் இனி ஹிட்டாகும். நல்ல முதிர்ச்சி அடைந்த, அறிவார்ந்த பெண்கள் இப்போதெல்லாம் ரௌடி என்றால் திருப்பி அடிக்கிறார்கள். வெட்டி பந்தாவாக சுற்ற மட்டுமே இது உதவுமே தவிர இனி பெண்களை இம்ப்ரஸ் செய்ய துளிக் கூட உதவாது.
கேஜெட்டுகள்
மொபைல் ஃபோன், கேஜெட்டுகள், ஃப்ரீக்கி, ஃப்ரான்கி எல்லாம் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாகிவிட்டது. தாத்தாக்கள் கூட கூகிள் ஃபிட் வைத்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே, இதுவும் வேலைக்கு ஆவாது.
புகழ்
நான்கு பேருக்கு மத்தியில் கெத்து காண்பித்துவிட்டால் பெண்களை மடக்கி விடலாம் என்றால் ஊரில் நான்கு பேருக்கு மட்டும் தான் காதல் அமையும். உண்மையில் பெண்கள் யார் ஒருவன் அவனாக நடந்துக் கொள்கிறானோ அவனை தான் அதிகம் விரும்புகிறார்கள்.
அறிவு
பெண்கள் எப்போதும் ஐ.ஐ.எம் ஜீனியஸ் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பது இல்லை. ஏனெனில், அவர்கள் ஒழுக்கம், நேர்மை, தவறு, அறிவியல், உலக பொருளாதாரம் என பலவற்றை தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிப்பார்கள்.
அப்போ என்ன தான் வேணும்???
நீங்க, நீங்களா இருந்தாலே போதும் பாஸ், அதை பிடித்து ஓர் பெண் உங்களை உண்மையாக விரும்புவார். மனதிற்குக் மேக்-அப் அணிந்துக் கொண்டு பெண்களை இம்ப்ரஸ் செய்தால் மேக்-அப் கலைத்த பிறகு காதலும் கலைந்துவிடும்.
0 comments:
Post a Comment