வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களில் ஒரு இறாத்தல் பாண் 60 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்றப் பின் பாணின் விலை குறைக்கப்பட்டு 54 ரூபாய் ஆக விற்கப்பட்டு வந்த நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக 4 ரூபாய் அதிகரித்து பாண் ஒரு இறாத்தல் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 58 ரூபாய்க்கு பதிலாக 60 ரூபாய்கே பாண் ஒரு இறாத்தல் விற்பனை செய்யப்படுகின்றது.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.
0 comments:
Post a Comment