முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மஹகும்புக்கடவல பிரதேசத்தில், தென்னந்தோப்பொன்றைப் பார்த்துக்கொள்ளும் தொழிலில் புரியும் 41 வயதுடைய நபர் 14 வயதுடைய இரட்டைச் சகோதரிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் முந்தலம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டைச் சகோதரிகள் பாடசாலை செல்லும் மாணவிகள் என்பது
குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை, தாயை விட்டு விலகிச் சென்றிருந்த நிலையில், சந்தேகநபர் குறித்த சிறுமிகளின் தாயுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார்.
தாயுடன் தகாத தொடர்பை பேணி வந்த சந்தேகநபர் 2013ம் ஆண்டு முதல் ஒரு சிறுமியை வாரத்தில் ஒரு நாள் வண்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார். 2014ஆம் ஆண்டின் பின்னர் அடுத்த சிறுமியையும் வண்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரட்டைச் சகோதரிகள் இருவரும் இந்த விடயம் குறித்து தம் பாட்டியிடம் தெரிவித்த போதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை இந்நிலையில் கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் சிறுமிகளின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றதையடுத்து, சந்தேகநபர் இரண்டு சிறுமிகளையும் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இதன்பின்னர் சம்பவம் குறித்து சிறுமிகள் பாட்டியிடம் மீண்டும் தெரிவித்ததையடுத்து பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இரட்டைச் சகோதரிகள் வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment