சிறுமியொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டில், இந்தியாவின் திருமங்களம் அருகேயுள்ள உச்சபட்டி எனும் கிராமத்திலுள்ள அகதிமுகாமைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முகாமிற்கு அருகேயுள்ள வீடொன்றிற்குள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை புகுந்த 21 வயது நிரம்பிய குறித்த இளைஞன், அங்கு தனிமையில் இருந்த 15 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார்.
குறித்த சிறுமியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இவ் இளைஞன் தப்பியோடியுள்ளார். அதே தினம் மாலை சிறுமியின் தாய் அவ் இளைஞனிடம் இது குறித்து விசாரித்தபோது அவரை தகாத வார்த்தையில் திட்டியதாக, தாயார் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமூலத்தின் பிரகாரம் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment