தனது சொந்த மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் புத்தளம் மாவட்டம்,நாத்தாண்டிய - கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 08ல் கல்வி கற்று வருவகிறாள். குறித்த சிறுமியின் தாய், அண்ணன் மற்றும் சகோதரி ஆகிய மூவரும் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தந்தையால் தான் பாலியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை சகோதரியிடம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
சகோதரி தாயிடம் கூறவே தாய் சம்பவம் குறித்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கடந்த ஆண்டில் ஒருநாள் தான் தந்தையால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக பல தடவைகள் தந்தையால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment