திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையையும் -மகனையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா இன்று புதன்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பத்து வயது சிறுமி தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், அதனையடுத்து 18 வயதான சகோதரர் தந்தையில்லாத நேரத்தில் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment