இந்தியாவில் சேத்துப்பட்டு பழம்பேட்டையை சேர்ந்த விவசாயி வேலுவின் மகன் சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசியதாகவும்,சுரேஷ் அந்த மாணவியிடம், சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திந்து பேசியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சுரேஷ் அந்த மாணவியை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து பிரியா, தனது உறவினர்களிடம் கூறியுள்ளாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுரேஷிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
இது குறித்து சேத்துப்பட்டு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்ததை தொடர்ந்து அப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment