கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியான பேட்மேன் V சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம்ஐந்து நாட்களில் 300 மில்லியன் பவுண்டுகளை வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இந்தப் படம் 170.1 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. மார்ச் மாதம் வெளியான படங்களிலேயே அதிக அளவில் வசூலித்த திரைப்படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.
வார்னர் பிரதர்ஸ் தயாரித்த இந்தப் படம், சூப்பர் மேன், பேட் மேன் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்களும் இடம்பெற்றிருந்தனர்.
ஜூபிடர் அஸென்டிங், பான் என தொடர்ச்சியாக வார்னர் பிரதர்ஸ் தயாரித்த படங்கள் தோல்வியடைந்த நிலையில், இந்தப் படத்தின் வெற்றி வந்திருக்கிறது.
250 மில்லியன் டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஹாரி பாட்டாரின் இரண்டாவது பாகத்திற்கு அடுத்தபடியாக உலகளாவிய அளவில் அதிக வசூலைப் பெற்றிருக்கிறது.
மார்ச் மாதத்தின் நடுவில் நியூயார்க்கில் முதலில் வெளியானபோது ரசிகர்கள் இந்தப் படத்தை வெகுவாகப் புகழந்தாலும் விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்தத் திரைப்படம் 66 சந்தைகளில் 40,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சீனாவில் 16,000 திரையரங்குகள், அமெரிக்காவில் 4,242 திரையரங்குகள், பிரிட்டனில் 1,701 திரையரங்குகள், தென் கொரியாவில் 1, 696 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
ஜாக் ஸ்னைடர் இயக்கியிருக்கும்
இந்தப் படத்தில் பென் அஃப்லெக்கும் ஹென்றி கேவிலும் நடித்திருந்தனர். ஒன்டர் உமென், ஃப்ளாஷ் என அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 டிசி காமிக்ஸ் பாத்திரங்களை களமிறக்க வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதில் முதலாவதாக ஆகஸ்ட் மாதம் சூஸைட் ஸ்குவாட் வெளியாகிறது.
0 comments:
Post a Comment