இந்த விடயம் தொடர்பான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள், பொது அமைப்புகளினால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமாக பல தடவை சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் எல்லை நிர்ணயக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறிந்து இறுதித் தீர்மானம் எடுக்கும் இறுதி சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கான அழைப்பு கடிதங்கள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கூட்டத்திற்கு வருகைதராத நிலையில், மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா மற்றும் எம்.பி நடராசாவும் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில் வட மாகாணசபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜயதிலக, தர்மபால செனவிரத்தின, ஆர்.இந்திரராஜா, ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா வரியிறுப்பாளர் சங்க பிரதிநதிகள், பிரதேச செயலாளர்கள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலாளர் மற்றும் பொதுஅமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment