
நேற்று இரவு 07.30 மணி அளவில் பூசாரியின் வீட்டினுல் அத்துமீறி நுழைந்து குறித்த பூசாரியையும் அவரது மனைவியையும் தாக்கி உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மேற்பிரிவு தோட்ட மக்கள் தொழிலுக்கு செல்லாது இன்று காலை 08மணி முதல் 10மணி வரை பனி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலய பூசாரியை தாக்கியவர்களையும் ஆலயத்தின் கதவுகளை சேதப்படுத்தியவர்களையும் கைது செய்யுமாறு கோரியே இன்றய தினம் பனிபகிஷ்கரிப்பில் ஈடுபடட்டதாக லச்சுமி தோட்ட மேற்பிரிவு தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த பொலிஸார் தாக்குதலுக்கு காரணமான நான்கு பேரையும் இன்று காலை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான பூசாரி மற்றும் அவரது மனைவி ஆகிய இரண்டு பேரும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, கைது செய்யபட்ட நான்கு பேரும் இனறய தினம் ஹட்டன் நீதவான் நீமன்றத்தில் அஜர்படுத்தப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment