பெண்மணி தனியாக வீட்டில் இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற இந்த சந்தேக நபர் குறித்த பெண்மணியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளின் போது, குறித்த பெண்மணி மாத்தறையை சேர்ந்த 79 வயதானவர் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் மாத்தறை குமாரதாச மாவத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இரத்மலானை விமானப்படை முகாமில் பணியாற்றி வருபவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த சந்தேக நபர் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment