புதிய அரசியலமைப்பை உருவாக்குவதனூடாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதனை உறுதியாக கூற முடியாது என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு நேர்மையான முறையில் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக்கூட தமக்கு தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான எட்கா விவகாரம் மற்றும் பதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை அரசாங்கம் இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் உறுதியாக உள்ளது. ஆனால் அந்த உடன்படிக்கை மூலம் ஸ்ரீலங்காவின் தொழில்துறைக்கு பாரிய சேதம் ஏற்படும் என்பதை கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றது. அதனை தமது கட்சி எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு அவசியம் என்பதை தாமும் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் இவ்வாறு உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்றால் அதனை உறுதியாக கூறமுடியாது என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment