புங்குடுதீவு பகுதியில் கைவிடப்பட்டுள்ள, பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டார்.
புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்தியா வழக்கு விசாரணையின் போது மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வழக்கில் நேற்யதினம் ஆஜராகிய குற்றப் புலனாய்வு பிரிவினர் புங்குடுதீவு பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் இடம்பெற சாத்தியம் அதிகம் இருப்பதற்கு காரணம் பாழடைந்த ,கைவிடப்பட்ட வீடுகள், கட்டடங்களே காரணம் என நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது ஏற்றுக்கொண்ட நீதவான் “இன்றிலிருந்து குறித்த கட்டடங்களை இனங்கண்டு அழிக்குமாறு” சம்பந்தப்பட்டவர்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் “வெளிநாட்டில் இருந்து கொண்டு புங்குடுதீவு தாயக காணிகள், வீடுகள், கட்டடங்களை உரிய பராமரிப்பு செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக அவ்விடம் சென்று, பார்வையிட்டு சொத்துக்களை பொறுப்பேற்குமாறு” பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து வேலணை பிரதேசசபை கட்டடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
0 comments:
Post a Comment